பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெமி லூசிடி என்பவர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவர். உயரமான கட்டிடங்களில் ஏறி ஒவ்வொரு கட்டிடமாக தாவி சாகசம் செய்து அதனை இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டு அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். கடந்த வாரம் இவர் ஹாங்காங்கிற்கு டிரேகண்டர் டவர் எனும் மிகப்பெரிய கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய சென்றிருந்தார்.

இதற்காக லிப்ட் மூலமாக 68 வது மாடிக்கு சென்ற ரெமி  அங்கு நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்து விட்டார். இதை அங்கிருந்த பணி பெண்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் ரெமியை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.