சீனாவின் பெய்ஜிங் நகரில் 89 வயது மூதாட்டி ஒருவர், தான் வசிக்கும் 27-வது மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தற்செயலாகத் தனது படுக்கையறையில் சிக்கிக்கொண்டார். வெளியே வருவதற்கு வழி தெரியாமலும், செல்போன் கையில் இல்லாததாலும் பதற்றமடைந்த அவர், ஜன்னல் வழியாக வெளியேறி கட்டிடத்தின் வெளிப்பகுதியில் இருந்த ஏசி பெட்டிகளுக்கான இரும்பு வேலிகளைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கத் தொடங்கினார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கட்டிடக் காவலர்களும் துப்புரவுத் தொழிலாளர்களும் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். சுமார் 6 மாடிகள் வரை ஆபத்தான முறையில் இறங்கிய அந்தப் பாட்டி, உடல் சோர்வு காரணமாக 21-வது மாடியில் இருந்த ஏசி பிளாட்பாரத்தில் தஞ்சம் புகுந்தார்.

தீயணைப்பு வீரர்கள் 21-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து, பாட்டியைப் பாதுகாப்பு கயிறு மூலம் கட்டி மீட்டனர்.

“>

 

தரையிறங்கும் வரை ஏசி வேலிகளைப் பிடித்துக் கொண்டே கீழே சென்றுவிடலாம் என்று தான் நினைத்ததாகப் பாட்டி கூறியது மீட்புக் குழுவினரையே வியப்பில் ஆழ்த்தியது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பாட்டி எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.