சென்னையில் கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளை கொட்ட வேண்டும். பொது இடங்களில் ஒரு டன் அளவிற்கு குறைவான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என அபராதம் விதிக்கப்படும். குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிட கழிவுகளை கொட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு வரை பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ஒரு கோடியை 87 லட்சத்து 88 ஆயிரத்து 628 ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.