
சத்தீஸ்கர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வருகின்ற நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையில் வேட்பாளர்கள் தேர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின் போது முதல்வர் தன்னுடைய செல்போனில் கேண்டி க்ரஷ் கேம் விளையாடியதாக புகைப்படம் ஒன்றை பாஜகவினர் வெளியிட்ட கிண்டல் செய்துள்ளனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பூபேஸ் பாகல், மாட்டுவண்டி ஓட்டுவது மற்றும் கில்லி தாண்டா ஆடுவதைப் போல கேண்டி க்ரஷ் விளையாடுவதும் தனக்கு பிடித்தமான விளையாட்டு தான். அன்றைய தினம் அந்த லெவலை வெற்றிகரமாக முடித்து விட்டதாக அவர் பதில் அளித்துள்ளார்.