தேசிய சினிமா தினம் அக்டோபர் 13ஆம் தேதி நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகள் 99 ரூபாய் விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த ஆஃபர் மூலம் கூடுதலாக ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் மற்றும் ஆஃப்லைனிலும் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள ரசிகர்கள் BookMyShow, Paytm  போன்ற தளங்களில் அல்லது மல்டிபிளக்ஸ்களின் சம்பந்தப்பட்ட இணையதளங்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.