தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்..

விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் ரிங்கு சிங் முக்கிய பங்கு வகித்தார். இந்த போட்டியில் முடிவில் ஆக்ரோஷமாக விளையாடும் நிலையில் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நிதானமாக நின்று ஃபினிஷராக போட்டியை முடித்தார் ரிங்கு சிங். இந்த பண்பை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாக ரிங்கு சிங் கூறியுள்ளார். ‘என்னால் அமைதியாக இருக்க முடிந்ததற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி விளையாடுவது என்பது குறித்து மஹி பாயிடம் (தோனி) பேசினேன். குறிப்பாக கடைசி ஓவரில் அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவரது அறிவுறுத்தல்கள்தான். முடிந்தவரை அமைதியாக இருக்கவும், பந்து வீச்சாளர் மீது நேரடியாக கவனம் செலுத்தவும் அவர் கூறினார்’ என தெரிவித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மீதமிருக்க, ரிங்கு நம்பிக்கையுடன் அதை ஒரு சிக்ஸருக்கு அடித்தார்.

ஆனால் அபோட் வீசிய பந்து நோபால் என்பதால் சிக்ஸர் கணக்கில் வரவில்லை. ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு போன பிறகு அக்ஷர் சொல்லும் வரை எனக்கு இது தெரியாது. ஆனால் 6 இல்லை என்பது பெரிய பிரச்சினை அல்ல. போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியம். அது போதும்’ என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.