மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின் உடல், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் (பாலன் இல்லம்) வைக்கப்பட உள்ளது. இன்று மாலை 5.30 மணி முதல் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கேயே இன்று இரவு முழுவதும் மக்கள் அஞ்சலி செலுத்தத் தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை மாலை 3.30 மணி வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன் பின்னரே இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால், தியாகராய நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எளிமையின் அடையாளமாக வாழ்ந்த ஒரு தலைவருக்குத் தமிழகம் கண்ணீர் மல்க விடை கொடுக்கத் தயாராகி வருகிறது.
