
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு இனி விழா குழு அமைக்க கூடாது என அறநிலையத்துறை கண்டிப்பாக தெரிவித்துள்ளது. நீதிமன்ற ஆணையை மீறி மதுரையில் உள்ள ஒரு கோவிலில் விழா நடத்த குழு அமைத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இனி உத்தரவை மீறி கோவில்களுக்கு விழா குழு அமைத்தால் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.