டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி, ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் நிலைதடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழவிருந்த விபரீத சம்பவம் அரங்கேறியது.

ரயிலில் இந்தச் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்தப் பயணி ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி கீழே விழப் பார்த்தார். அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த துணை நிலைய கண்காணிப்பாளர்  ரிங்கு, சிறிதும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, கீழே விழவிருந்த பயணியைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார்.

“>

 

சில வினாடிகள் தாமதித்திருந்தாலும் அந்தப் பயணியின் உயிர் ரயிலின் சக்கரத்தில் சிக்கிப் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடமை உணர்வுடன் செயல்பட்ட அதிகாரி ரிங்குவின் இந்த வீரதீரச் செயலை ரயில்வே நிர்வாகம் பாராட்டியுள்ளதுடன், இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.