நிழற்படக் கலைஞராகவோ அல்லது டிஜே ஆகவோ இருப்பவர்கள் கொண்டாட்டங்களில் உற்சாகத்தை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், டிஜே இசைத்த அதிரடி ‘பேஸ்’ சத்தம் அருகில் இருந்த ஒரு மருந்தகத்தையே நிலநடுக்கம் வந்தது போல் குலுங்க வைத்துள்ளது. கடையின் அலமாரிகள் மற்றும் சுவர்கள் அதிர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், உடனடியாக வெளியே வந்து டிஜே-விடம் இசையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் “இப்படியே போனால் கடை சுவர் இடிந்து விழுந்துவிடும், பிறகு நீயா அதை கட்டித் தருவாய்?” என்று அவர் ஆவேசமாகவும் அதேசமயம் ஆதங்கத்தோடும் கேட்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்படியான ஒலி மாசு மற்றும் அதிரும் இசையினால் கட்டிடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by 4log 400baatein (News) (@4log400baatein)

“>

இது குறிப்பாக, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இவ்வளவு சத்தத்துடன் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது பொதுமக்களுக்கு இடையூறாக அமைவதோடு, பழைய கட்டிடங்களுக்குப் பலவீனத்தை ஏற்படுத்தும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேடிக்கையான வீடியோவாகத் தெரிந்தாலும், சத்தமான இசையினால் மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.