
ரஷ்யாவில் உள்ள கேட்ச் கடற் பகுதியில் கடந்த வாரம் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்பதாயிரம் டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு கப்பல்கள் அனபா கடற்பகுதியில் வந்த போது புயல் தாக்குதலால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இவ்வாறு மோதி கொண்டதில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது வரை 4000 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கச்சா எண்ணெய் கசிவு காரணமாக இரண்டு டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.