
நாகர்கோவில் அடுத்துள்ள உடையார்விளையில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் பாபு (31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்களை வைத்து ஆரி ஒர்க் வேலை செய்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலை சேர்ந்த சாந்தி (29) என்ற பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர் பார்த்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூபாய் 10 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவியும் உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷ் பாபுவின் பிறந்த நாளன்று மதியம் அவர் மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது மனைவியுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின் வீடு திரும்பிய சந்திரன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.