கடகம் ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். செல்வாக்கு மிக்க நாளாக இருக்கும். உதவி என வருபவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் அடுத்த கட்டம் சிறப்பாக அமையும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். கடன்கள் குறைந்து விடும் பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

எதிரிகள் யார் என்பதை கண்டறிவீர்கள். முன் கோபம் வேண்டாம். கொடுத்தக் கடனை அடைக்க கடுமையாக உழைப்பீர்கள். நேர்மையாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள் பெண்கள் இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். கவலைகள் ஓரளவு மறக்கும். பிள்ளைகளிடம் சிரித்து பேசி மகிழ்கிறீர்கள். நல்ல வரன்கள் அமையும்.

எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். படிப்பில் அக்கறை தேவை. முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்