தமிழ் திரையுலகில் மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகியது. இப்போது கங்குவா படத்தில் இணைந்திருக்கும் புது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது, கேஜிஎஃப் படத்தில் நடித்த பி.எஸ்.அவினாஷ் இப்படத்தில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.