தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது வேதாரண்யம் தொகுதி உறுப்பினர் துளியாப்பட்டினம் பகுதியில் அவ்வையார் களஞ்சியம் அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பினார். அதாவது வேதாரண்யம் பகுதியில் அவ்வையாருக்கு தனி கோவில் இருக்கும் நிலையில் தற்போது மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த மணிமண்டபத்தில் அவ்வையார் களஞ்சியம் அமைக்க வேண்டும் என்று வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ‌எஸ் மணியன் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் சாமிநாதன் பதில் வழங்கிய நிலையில் நிதிநிலைக்கு ஏற்றவாறு முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது பேசிய ஓ .எஸ் மணியன் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் அவ்வையார் புத்தகங்களை வைத்தாலே போதும். இதற்கு ஏன் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

அதோடு அறம் செய்ய விரும்பு என்பது தொடங்கி அருமையான ஔவையார் பாடல்கள் புத்தகத்தை அங்கு வைக்க வேண்டும் என்று அவர் கூறிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஆராய்ச்சியாளர்கள் 5 அவ்வையார்கள் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே நீங்கள் எந்த ஔவையாரை கூறுகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என்றார். அறம் செய்ய விரும்பு என்று சொன்ன ஔவையார் வேறு புறநானூறு பாடிய  ஔவையா வேறு என்பதால் தெளிவாக இதை விளக்க வேண்டும் என்றார். அப்போது குறிகிட்ட  சபாநாயகர் அப்பாவு ஐந்து ஔவையார்கள் இருக்கும் நிலையில் வேதாரண்யத்தில் இருக்கும் ஔவையார் யார் என்பது தான் தற்போதைய கேள்வி என்றார்.

அதற்கு ஓஎஸ் மணியன் ஒரு காலத்தில் பாடல் பாடிய அனைவருமே ஔவையார் தான் என்று கூறினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் நம்ம வீட்டில் இருக்கும் வயசானவர்களை ஆயா என்று அழைப்பது போலவா என்றார். மேலும் இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு இதுவரை ஔவையார்  என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில் தற்போது தான் ஔவையார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்ஔவையாரை பெண் இனத்திற்கு ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம் எனவே இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஔவையார் அறிவு களஞ்சியம் அமைக்கப்படும் என்றார்.