இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் தான் உயர்ந்த பதவியிலுள்ளவர்கள் என்ற எண்ணம் பலரிடமும் நிலைத்து இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் கடுமையாக உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி, ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “நான் டிஸ்ட்ரிக்ட் மெஜிஸ்ட்ரேட்டிடம் பேச விரும்புகிறேன்; நீங்கள் தானா அந்த அதிகாரி?” என நீதிபதி கேட்க, அந்த அதிகாரி “ஆம்” என பதிலளிக்கிறார். பின்னர், “அரசு கொடுத்த உத்தரவு முக்கியமா, நீதிமன்றம் கொடுத்த உத்தரவு முக்கியமா?” என நீதிபதி கேட்க, “நீதிமன்ற உத்தரவே முக்கியம்” என அந்த அதிகாரி பதிலளிக்கிறார்.
இதையடுத்து, நீதிபதி “அப்படியானால் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துங்கள்” எனக் கூற, “அதற்கு இன்னும் ஓர் இடத்தில் இருந்து அனுமதி வர வேண்டும்” என அதிகாரி பதிலளிக்கிறார். அதற்கு உடனே நீதிபதி, “உங்களுக்கு யாருடைய அனுமதி வேண்டும்?” எனக் கேட்டு, தொடர்ந்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகிறார்.
Power of Judiciary 🔥 🔥 🔥 🔥 pic.twitter.com/OUjc6IH80R
— 🐅ராச.துரை ஆனந்தன் 🐅 (@thuosi) October 14, 2025
“>
அதற்கு தயங்கி, “மாநில அரசின் அனுமதி வேண்டும்” என அதிகாரி கூற, நீதிபதி “அப்படியா? இதை நான் எழுதிக் கொள்ளலாமா?” என வினவ, உடனே அந்த அதிகாரி “தயவுசெய்து எழுத வேண்டாம், என்னை மன்னிக்கவும் நீதிபதியவர்களே” எனக் கூறுகிறார்.
நீதிமன்றத்தின் அதிகாரமும், சட்டத்தின் உயர்வும், அதிகாரப்பூர்வ நிலைமையை மீறி நீதிக்கே தலைவணங்கும் நெறிமுறையையும் வெளிப்படுத்தும் இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு, “சட்டத்தின் முன் யாரும் மேலல்ல” என்ற உண்மையை நினைவூட்டும் சாட்சியாக பாராட்டப்படுகிறது.
