மதுரை எம்.பி சு .வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் ஒரு லட்சம் விற்பனை பிரதிநிதிகளை கடந்ததால் அதன் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அமைச்சர் எ.வ வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவின்போது திமுகவில் பழைய மாணவர்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் என கூறினேன்.

அதுக்கு கிடைத்த கைதட்டில் அதன் பிறகு சொல்ல வந்ததை மறந்து விட்டேன். இப்போது அதனை முழுமையாக சொல்கிறேன். அதாவது பழைய மாணவர்கள் தான் இயக்கத்தின் தூண், சிகரம், அவர்களோடு அனுபவம் தான் மிகப்பெரிய பலம். இதை நான் சொல்ல மறந்து விட்டேன் என நகைச்சுவையாக கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு துரைமுருகன் நான் ரஜினிகாந்திடம் செல்போனில் பேசினேன். அப்போது ரொம்ப தேங்க்ஸ் ரஜினி. இப்பவாவது மறக்காம சொன்னிங்களே என அவரிடம் கூறினேன் என்றார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்  பழைய மாணவர்கள் வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறார்கள். புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது தான் கடினம். இங்கு நிறைய பழைய மாணவர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பிறகு வகுப்பறையை விட்டு செல்ல மறுக்கிறார்கள். அமைச்சர் துரைமுருகன் கலைஞர் கருணாநிதியின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர் என்ற கூறினார்.

அவர் அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு பேசிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரும் வயதானவர்கள் எல்லாம் சினிமாவில் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது என்றார். இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறும் போது துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் இல்லை என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் இந்த விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு ஒரு விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.