
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு சமூக நல ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இந்த தொகையை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.