மக்கள் அனைவரும் தங்களின் ஓய்வு காலத்தை நிதி ரீதியாக எவ்வாறு மேம்படுத்துவது என்று குழப்பத்தில் உள்ளனர். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கடைசி காலத்தில் கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த கவலையை போக்க தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணத்தை டெபாசிட் செய்து வந்தால் அதிக வருமானம் கிடைக்கும். கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதி பாதுகாப்பை வழங்குவது தான்.

மத்திய அரசு முதலில் அரசு ஊழியர்களுக்காக இந்த திட்டத்தை உருவாக்கிய நிலையில் பிறகு தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் ஒரு கோடி ரூபாய் வருடாந்திர திட்டத்தில் 6 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை எடுத்துக் கொண்டால் ஒரு மாத ஓய்வூதியமாக 50000 கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது