கோவை ராம்நகர் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து உள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டுள்ளது. கண்டிப்பாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வரும். உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தவறாக வழிநடத்தி இருக்கின்றனர். அவர்கள் கூறிய பொய்கள் அனைத்தும் இம்முறை எடுபடாது.

பொதுக் குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இபிஎஸ் அர்த்தமே இன்றி சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வருகிறார். இபிஎஸ்-ஐ விட எஸ்.பி.வேலுமணி தெளிவானவர். இபிஎஸ்கு பதில் வேலுமணி வழி நடத்தலாம். இபிஎஸ் பகல் கனவு காண்கிறார். இதனால் அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். ஓபிஎஸ் தற்போதும் அதிமுக ஒருங்கிணைப்புக்கு தயாராக இருக்கிறார். 3, 4 பிரிவுகளாக உள்ள அதிமுக ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இவ்வாறு 4 பிரிவுகளாக இருந்தால் திமுகவிற்கு தேர்தல் என்பதே தேவையில்லை” என அவர் தெரிவித்தார்.