முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தத் தொகுதியான போடியில், அவரது மிக நெருக்கமான ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தன் பக்கம் இழுத்துள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்கள், மக்கள் சந்திப்புகள் என அவர் செல்லும் இடமெல்லாம் நிழல் போலக் கூடவே இருப்பவர் திருப்பதி. ஓபிஎஸ்-ன் தீவிர விசுவாசியாகக் கருதப்பட்ட இவர், சமீபத்தில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்

இந்நிலையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான திருப்பதி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். திருப்பதி தலைமையில் சுமார் 400 பேர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

சொந்தத் தொகுதியிலேயே மிக முக்கியமான நிர்வாகி ஒருவரை எடப்பாடி பழனிசாமி தரப்பு தன்பக்கம் இழுத்திருப்பது, தேனி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் அரசியல் மாற்றத்தால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.