அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் தலைமையை கைப்பற்றுவதற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக அதிமுக எடப்பாடி வசமே செல்லும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அடுத்த தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுக என்ற கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொண்டோம். எங்களுக்குள் போட்டி பொறாமை இருக்கக் கூடாது. மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக 20-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.