
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபர். இவர் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
அப்போது சாலையில் நின்ற ஒரு கும்பல் செந்தில் ஆறுமுகத்தை வழிமறித்துள்ளனர். அவர்கள் துரத்தி துரத்தி செந்தில் ஆறுமுகத்தை அரிவாளால் கொடூரமாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செந்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.