நாடு முழுவதும் டெல்லி, சென்னை மற்றும் பெங்களூர் உட்பட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நிலையில் தற்போது பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது மெட்ரோ ரயிலில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல்பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பீடி மற்றும் சிகரெட், மதுபானங்கள் போன்றவைகளையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் மாற்று திறனாளி ஒருவர் ஓடும் மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் பிச்சை எடுக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.