சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவெற்றியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். 15A தடம் கொண்ட பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். தங்களிடம் இருந்த பைகளை தூக்கி வீசி அலப்பறையில் ஈடுபட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.