
பொதுவாக யானை என்றாலே முதலில் நம்முடைய நினைவிற்கு வருவது கம்பீரம். என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை சில நேரம் குழந்தை போல சேட்டை செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. இது போன்று யானைகள் குறித்து வெவ்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரேண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது காட்டுப்பகுதி சாலையில் திடீரென்று வந்த யானை ஒன்று நபர் ஒருவரை அசுர வேகத்தில் ஓடி வந்து துரத்துகிறது. உயிருக்கு பயந்து போன அவர் ஓடி வருகிறார்.
ஓடிவந்த யானை ஜீப்பையும் துரத்திக் கொண்டு வந்தது. இதை ஜீப்பில் இருந்த பெண் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் டிரைவர் விரைவாக வண்டி ஓட்டவில்லை என்றால் அந்த யானை ஜீப்பில் இருந்த அனைவரையும் துவம்சம் செய்திருக்கும். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Safety First..
Be vigilant in their habitats..🐘#Wildlife #habitat #elephant @susantananda3 pic.twitter.com/wJz87TE5P5— Surender Mehra IFS (@surenmehra) May 9, 2023