புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் சூர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியின் அருகே சாராயம் விற்பனை செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய குற்ற செயல்களை தடுப்பதற்காக கிளியனூர் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்டனர். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் பழனிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவர் சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஒப்புதல் வழங்கினார். மேலும் அதன்படி சூர்யாவை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.