இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதியை பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. அதாவது உள்நாட்டு வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் 1118.50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிலிண்டர் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்  டெல்லியில் ரூ.903க்கும், கொல்கத்தாவில் ரூ.929க்கும், மும்பையில் ரூ.902.50க்கும், சென்னையில் ரூ.918.50க்கும், குர்கானில் ரூ.911.50க்கும், நொய்டாவில் ரூ.900.50க்கும், பெங்களூரில் ரூ.905.50க்கும், புவனேஷ்வரில் ரூ.929க்கும், சண்டிகரில் ரூ.912.50க்கும், ஹைதராபாதில் ரூ.955க்கும், ஜெய்ப்பூரில் ரூ.906.50க்கும், லக்னோவில் ரூ.940.50க்கும், பாட்னாவில் ரூ.1001க்கும், திருவனந்தபுரத்தில் ரூ.912க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.