வேலூர், அகரம்சேரியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்ற பிறகு தனது உரையைத் தொடங்கினார்.

வழக்கம் போல ஒரு ‘குட்டி கதை’ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கிய அவர், அனுபவம் இல்லை என விமர்சிப்பவர்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், “நான் விரைவில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் வரவுள்ளேன். என் சொந்தங்களாகிய உங்களை எல்லாம் நேரில் சந்திக்கப் போகிறேன்” என அறிவித்துத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட விஜய், “இந்தத் தேர்தலில் இரண்டே பேருக்குத்தான் போட்டி; ஒன்று தீய சக்தியான திமுக, இன்னொன்று தூய சக்தியான தவெக” எனத் திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாகவும் மிகக் கடுமையாகவும் விமர்சித்துப் பேசினார். “மக்களைச் சந்திக்கவும், மக்களுக்காக உழைக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று நிர்வாகிகளுக்கு அவர் கட்டளையிட்டார். விஜய்யின் இந்த ‘நேருக்கு நேர்’ அரசியல் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.