
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம் அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என ஆதார் அமைப்பு கூறுகிறது. என் நிலையில் பிப்ரவரியில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக 90 கோடி பேர் ஆதாரை மொபைல் என்னுடன் இணைத்ததாகவும் கூறப்படுகிறது. 1700 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களின் பயனாளிகளை தேர்வு செய்ய ஆதார் கட்டாயமாகப்பட்டுள்ளது.