நாடு முழுவதும் இன்று  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறையும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள், பொம்மைகள், சைக்கிள், தொலைக்காட்சிகள், வைரம், வண்ணகற்கள், போன்கள், போன் சார்ஜர், கேமரா லென்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், லித்தியம் அயன்  பேட்டரிகள் மற்றும் பெட்ரோலியம் பொருட்களில் பயன்படுத்தப்படும் சில ரசாயனங்கள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட உள்ளது.

அதனைப் போலவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் இன்று  முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் விலை உயர இருக்கின்றன. சிகரெட் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதால் அதன் விலையும் உயரும். அதோடு LED டிவிகளில் விளையும் உயரப் போகிறது.