சத்தீஷ்கர் மாநிலத்தில் இன்று முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அம்மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2500 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெறுவோரின் குடும்ப வருவாய் வருடத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருப்பது அவசியம்.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் அதிகபட்சம் ஒருவர் மட்டுமே இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்க முடியும். மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்களுடைய குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் உதவிதொகை பெருபவருக்கு அந்த வருடம் முழுக்க வேலை கிடைக்கவில்லை என்றால் உதவி தொகை திட்டம் அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது