இந்தியாவில் இனி ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிஐஎஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்  எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்காக இனி பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை, காரட்டில் தங்கத்தின்  தூய்மை மற்றும் 6 இலக்க எண், எழுத்துக் கொண்ட HUID குறியீடு ஆகிய 3 அடையாளங்கள் கொண்ட தங்க நகைகளை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் இந்த முத்திரைகள் பதித்த தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் கவனத்தோடு வாங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் நாளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இந்த தகவலை கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிஐஎஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் கவின் கூறியுள்ளார்.