தலைநகர் சென்னையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆவடி பகுதியில் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் அவருடைய தம்பி ஸ்டாலின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மீதும் ஏராளமான வழக்குகள் நிலைமையில் இருக்கும் நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் நேற்று இரவு 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளது.
ஒரே நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு அண்ணன் தம்பி இருவரையும் கொலை செய்துள்ளனர். இதில் ஸ்டாலினை பட்டாபிராம் எல்லையில் வைத்தும் இரட்டைமலை சீனிவாசனை ஆவடியில் உள்ள ஒரு புதருக்குள் வைத்தும் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய முதல் கட்ட விசாரணையில் தருண், சாலமன், இளங்கோ, ஜோகன் மற்றும் மாதேஷ் ஆகூய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பின்னர் அவர்களை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
