மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் போட்டியில், யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இடையே, மைதானத்தின் ஓரத்தில் இருந்த ஒரு ‘பால் கேர்ள்’ செய்த செயல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் அவர் ஒரு தண்ணீர் பாட்டிலை அடுத்தடுத்து மூன்று முறை மிகச்சரியாக ‘பாட்டில் ஃபிளிப்’ செய்து அசத்தினார்.
இந்த அபாரமான ‘ஹாட்ரிக்’ சாதனையைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அந்தச் சிறுமி எவ்வித பதற்றமுமின்றி மிகவும் லாவகமாக பாட்டிலைச் சுழற்றி நேராக நிற்க வைக்கிறார்.
This girl is so talented; she got a hat-trick of bottle flips. Just listen to the crowd’s reaction 🤩 pic.twitter.com/m6XmwqVxHK
— Richard Kettleborough (@RichKettle07) January 13, 2026
“>
இதனால் களத்தில் வீராங்கனைகளின் ஆட்டம் ஒருபுறம் அனல் பறக்க, மைதானத்தின் ஓரத்தில் இந்த சிறுமியின் திறமை ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக அமைந்தது. கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அந்தச் சிறுமியின் துல்லியமான திறமையைப் பாராட்டி வருகின்றனர்.
