விவ்ரித் கோலி தனது நகைச்சுவையான செய்கைகளால் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில் எப்போதும் வல்லவர். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக வதோதராவில் நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, பயிற்சியின் போது தனது சக வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் தனித்துவமான நடை மற்றும் உடல் மொழியை கோலி அப்படியே இமிட்டேட் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

மேலும் களத்தில் தீவிரமாக செயல்படும் கோலி, அவ்வப்போது இதுபோன்ற குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு சக வீரர்களையும் ரசிகர்களையும் மகிழ்விப்பது வழக்கம். இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது ஸ்ரேயாஸ் ஐயரின் நடையை கோலி கிண்டலாக செய்து காட்டியது அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

“>

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்திய வீரர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான நட்புறவை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.