நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளியின் விலை கடுமையாக விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு சில பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் அளவிற்கு தக்காளி விலை ஆட்டம் கண்டு வருகிறது. பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது.

சமீபத்தில் பெங்களூரு நகரில் ஒருவர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்கப்பட்டதால் ஒரே ஒரு தக்காளியை மட்டும் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. தக்காளி ஒன்று கேட்டபோது கடை உரிமையாளர் தக்காளி ஒன்றின் விலையை கணக்கிட்டு 17 ரூபாய் வசூலித்துள்ளார். தக்காளி வாங்கிய பில்லை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.