உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் முதன்மை ஆசிரியை ஒருவர் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் முயற்சியை மேற்கொண்டு, கிராமத்தில் உள்ள பெண்களுக்காக தனது பள்ளியில் “பேட் பேங்க்” (நாப்கின் வங்கி) அமைத்துள்ளார். ராக்கி கங்வார் என்ற ஆசிரியை, போரியா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கியுள்ள இந்த முயற்சிக்கு பெண்கள், மாணவிகள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்குத் தேவையான சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து தெரியாமல், துணிகளை பயன்படுத்துவதைக் கண்டேன். யாரும் சானிட்டரி பேட் பயன்படுத்தவில்லை. பலருக்கும் நாப்கின்கள் இருப்பது கூட தெரியாது,” என்று கங்வார் தெரிவித்தார்.