
நாட்டின் குடி மக்களுக்கு தேவையான போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது இந்தியன் ரயில்வே. விலை ஒரு குறைவான பொது கம்பார்ட்மெண்ட் முதல் ஏசி சேவை வரை பலவிதமான சேவைகளும் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரே ஒரு ரயில் கட்டணம் மூலமாக நாடு முழுவதும் 56 நாட்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் விதமாக ஒரு திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் 56 நாட்கள் பயணிகள் பயணம் செய்யலாம்.
மேலும் தங்கள் விரும்பும் எந்த வகுப்பிலும் பயணிக்கலாம். இதற்கான கட்டணம் சாதாரண அளவில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்டை ரயில் கவுண்டரில் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள பிரிவு வணிக மேலாளர் அல்லது நிலைய மேலாளர் அலுவலகத்திடம் டிக்கெட் கோரிக்கை செலுத்தி இந்த டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும்.