சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்களின் அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் அவதானித்து வருகிறார்கள். இந்த நிலையில் சீரியல் ஜூன் மாதம் எட்டாம் தேதி முடிய உள்ள நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்ததால் அவருக்கு பதில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.
ஆனால் மாரிமுத்து நடித்த போது இருந்த வரவேற்பு தற்போது இல்லை. சீரியலின் இயக்குனரான திருச்செல்வத்தை பொருத்தவரையில் தான் விரும்பியவாறு கதையை நகர்த்துவார். ஆனால் சேனலில் குறித்த சுதந்திரம் முதலில் இருந்ததாகவும் தற்போது கதையை மாற்றக் கோரி சேனல் தரப்பு கூறியுள்ளது. மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்றாலும் அனைவருக்கும் சரியான கதாபாத்திரத்தை திருச்செல்வம் கொடுத்திருந்தார்.
கதையை மாற்ற வேண்டும் என கூறிய நிலையில் அதற்கு இயக்குனர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதியாக ஒரே ஒரு மின்னஞ்சல் சேனல் தரப்பில் இருந்து இருந்து திருச்செல்வத்திற்கு போக, அன்று இரவே எதிர்நீச்சல் சீரியலை முடிப்பதற்கு முடிவு செய்துள்ளார். இந்த சீரியலில் நடித்த ஆர்ட்டிஸ்ட்களுக்கு மறுநாள் படப்பிடிப்பிற்கு வந்தபோது நாளை கடைசி நாள் சூட்டிங் என்ற தகவலை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
