அமெரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு 49 ஆயிரம் பேர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துள்ளனர் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்த தற்கொலை வழக்குகளில் பாதிக்கும் ஏற்பட்டவை துப்பாக்கியால் சுட்டு நடந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அதிகம் எனவும் ஆய்வு கூறுகின்றது. இது குறித்து பேசிய அமெரிக்க சுகாதாரச் செயலாளர் 10 அமெரிக்கர்களில் ஒன்பது பேரு மனநல நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.