ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் அமெரிக்கா உக்ரேனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்பில் நிறுவனம் முற்றிலுமாக வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. அதே சமயம் மற்றும் நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு ஆப்பிள் ஐபோன்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரஷ்ய அரசு ஊழியர்கள் வேலை நிமித்தமான செயல்பாடுகளுக்காக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேடுகளை பயன்படுத்த தடை விதித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆப்பிள் போன்களின் மூலமாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை ரஷ்யாவின் நடவடிக்கைகளை உளவு வேலை செய்து வருவதாக ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. அதனால் ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகளை தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அரசு பணி நிமித்தமாக இதனை பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.