1989 ஆம் வருடம் சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சசர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்கப்பட்டதாக மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு வைத்தார். இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், ர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றை படித்து பேசுவார், என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் என்றும் அப்போது தனது தந்தை குமரி ஆனந்தன் எம்எல்ஏவாக இருந்தார் என்றும் அவர் தான் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது புத்தகங்களை தூக்கி எறிந்த போது தடுத்ததாகவும் அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.