நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் வந்த தமிழ் மக்களுக்கு சீமான் ஒருவேளை சாப்பாடு கூட வாங்கித் தரவில்லை என்றும், மாறாக அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டார் என்றும் அர்ச்சுனா மிகக் கடுமையான புகாரை முன்வைத்துள்ளார். ஈழத் தமிழர்கள் பெயரைக் கூறி சீமான் அரசியல் செய்வதாக சாடியுள்ள இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மேலும், சீமான் அடிக்கடி மேடைகளில் பேசும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடனான நினைவுகளையும் அர்ச்சுனா கடுமையாக விமர்சித்துள்ளார். பிரபாகரனுடன் சேர்ந்து தான் ஆமைக்கறி சாப்பிட்டதாக சீமான் கூறும் கதைகள் அனைத்தும் முற்றிலும் பொய் என்றும், மக்களை ஏமாற்றவே இப்படி பேசி வருகிறார் என்றும் அவர் சாடியுள்ளார். ஈழத் தமிழர் விவகாரத்தில் சீமானை நேரடியாக டார்கெட் செய்து இலங்கை எம்பி நடத்தியுள்ள இந்த அட்டாக், நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
