
தமிழகத்தில் சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதோடு மூடநம்பிக்கை குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பள்ளிகளில் உரிய அனுமதி என்று எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது எனவும், மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களை அறிவுரை வழங்கலாம் எனவும் வெளி ஆட்களை அழைத்து வந்த அறிவுரை வழங்கக்கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
அதோடு நேற்று பள்ளிகளில் ஆசிரியர்கள் மதிய உணவு இடைவேளைக்கு வெளியே செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றரிக்கையை அனுப்பியது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது கோயம்புத்தூரில் மருத்துவ முகாமின் போது பள்ளி மாணவியிடம் மருத்துவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து வரையறுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.