தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தங்களது தரப்பில் இருந்து அதற்கான முயற்சிகளை செய்து வந்தனர். ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை போதைப் பொருள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளும், அதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியதே தவிர குறையவில்லை.
போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக தமிழ்நாடு காவல்துறையின் கடுமையான சட்ட நடவடிக்கைகளை பின்பற்றியும், அதனை பின்பற்றாமல் மீண்டும் சட்ட ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக 2022 -ஆம் ஆண்டு முதல் தற்போது வரை போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான தகவல்களை டிஜிபி அறிவித்துள்ளார்.
அந்த விவரங்கள் பின்வருமாறு 2022 -ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14936 பேர் கைது செய்யப்பட்டனர். 2023 -ஆம் ஆண்டில் 10256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14470 பேர் கைது செய்யப்பட்டனர். 2024 -ஆம் ஆண்டில் 11025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,903 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு அதாவது 2025 -இல் மே மாதம் வரை மட்டுமே 5488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,480 பேர் கைது செய்யப்பட்டதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
