ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரு லிட்டர் கழுதை பால் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆரம்பத்தில் லிட்டருக்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 8000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, இருமல், ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு கழுதை பால் குடித்தால் சரியாகும் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இருந்தாலும் மருத்துவரிடம் கேட்காமல் குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுக்கக் கூடாது என்றும் குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.