நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியில் நடைபெற்ற வினோதமான திருட்டு முயற்சி ஒன்று அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவரின் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில், திருடன் ஒருவர் நுழைந்துள்ளார்.

பெரிய வீடு என்பதையும், அதன் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும் கண்ட திருடன், “வீட்டில் நகை, ரொக்கம் நிறைய இருக்கும்” என கருதி, சரியான சந்தர்ப்பத்தைக் காத்திருந்தான். இறுதியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கேமராவுக்கு தெரியாத வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த திருடன், பீரோவை உடைத்து உள்ளே இருந்த லாக்கரைத் திறந்து பெருசாக ஏதேனும் கிடைக்கும் என எதிர்பார்த்தபோதிலும், அதில் ஒரு ரூபாய்கூட இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

நீண்ட முயற்சி வீணானதில் மனமுடைந்த அவர், வீட்டிலேயே ஒரு கடிதம் எழுதி விட்டு சென்றுள்ளார். அதில்: “வீட்டில் ஒரு ரூபாய்கூட இல்ல. எதுக்கு இத்தனை கேமரா?”என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற திருடன், கதவுகள், அலமாரிகள் உடைக்கப்பட்ட நிலையில் வீட்டை கண்ட ஜேம்ஸ்பாண்ட் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. திருடன் எழுதிய விநோதமான கடிதத்தைப் பார்த்தும் அவர் திகைப்பில் ஆழ்ந்துள்ளார்.

தகவல் அறிந்த பழையபேட்டை காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து, சம்பவ இடத்தில் இருந்து திருடன் தொடர்பான கேரேகை (fingerprints) உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து, அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் வடிவேலு திரைப்படக் காட்சிகளை நினைவுபடுத்தும் விதமாக நகைச்சுவை பேச்சுகளுக்கு இடமாகியுள்ளது.