அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான லுசிட் மோட்டார்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழாவில் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஏர் செடான் மாடலுக்கு அடுத்ததாக அந்த நிறுவனம் அறிமுகம் செய்த இரண்டாவது மாடல் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும்.

கிராவிட்டி என்று அழைக்கப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இரண்டு மற்றும் மூன்றடுக்கு இருக்கை அமைப்புகளுடன் கிடைக்கும். 2024 ஆம் ஆண்டு இந்த காரின் உற்பத்தி பணிகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே இரண்டு ஸ்கிரீன்கள் உள்ள நிலையில் ஒன்று முப்பத்தி நான்கு இன்ச் அளவில் Curved டிஸ்ப்ளே ஆகவும் மற்றொன்று டேஷ் போர்டிலும் அமைந்துள்ளது.

அதோடு 22 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டமும் இந்த காரில் அமைந்துள்ளது. 792 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ள இந்த காரானது 100 கிலோ மீட்டர் வேகத்தை மூன்று புள்ளி 67 வினாடிகளில் கடக்கும் என்றும் இந்த காரை முழு சார்ஜ் செய்தால் சுமார் 708 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.