உடைகள், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்களைப் போன்று இனி ஆன்லைனிலும் கார் வாங்கலாம். இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அடுத்த ஆண்டு முதல் தங்களது தளத்தில் கார் விற்பனையைத் தொடங்கவுள்ளது. இதற்காக ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார் மாடலைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.

காரை அருகிலுள்ள டீலரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மேலும், உங்கள் வீட்டிலும் டோர் டெலிவரி செய்யப்படும். இந்த வசதி முதலில் அமெரிக்காவில் கிடைக்கும் என்றாலும், படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.